பழனி வரதமாநதி அணை நிரம்பியது


பழனி வரதமாநதி அணை நிரம்பியது
x
தினத்தந்தி 9 Jun 2023 12:45 AM IST (Updated: 9 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக பழனி வரதமாநதி அணை நிரம்பியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

வரதமா நதி அணை

பழனி பகுதியில் பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி மற்றும் குதிரையாறு ஆகிய அணைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும்.

இதில் பழனி-கொடைக்கானல் சாலையில் வரதமாநதி அணை உள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 66 அடி உயரம் கொண்ட வரதமா நதி அணை நிரம்பியது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

அணைக்கு வினாடிக்கு 25 கனஅடி நீர்வரத்து உள்ளது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பி வழிவதால் ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பகுதிகளுக்கு, வரும் நாட்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது.

இதேபோல் 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 39 அடியாக உள்ளது. பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியில் உள்ள 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையில் தற்போது நீர்மட்டம் 56 அடியாக உள்ளது. கோடை காலத்தில் வரதமா நதி அணை நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story