பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்


பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்
x

பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேம் நடந்தது. இதையொட்டி முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. மேலும் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள், மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், கோபூஜை, பிம்பசுத்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டனர். பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பாலதண்டாயுதபாணி மற்றும் வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் காட்டுப்பிரிங்கியம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


Next Story