கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புமாதேஸ்வர மலைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லைதமிழக எல்லையான பாலாறு வெறிச்சோடியது
கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் மாதேஸ்வர மலைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழக எல்லையான பாலாறு வெறிச்சோடியது.
மேட்டூர்
கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் மாதேஸ்வர மலைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழக எல்லையான பாலாறு வெறிச்சோடியது.
முழு அடைப்பு
கர்நாடகா மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ் சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மாண்டியா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
பஸ்கள் இயக்கப்படவில்லை
இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு செல்லும் பஸ்கள் உள்பட எந்தவொரு வாகனமும் இயக்கப்படவில்லை. இதேபோன்று மேட்டூரில் இருந்து மாதேஸ்வர மலைக்கு இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக- கர்நாடகா எல்லை பகுதியான சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த பாலாறு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த பகுதியில் கர்நாடக மாநில மாதேஸ்வர மலைக்குச் செல்ல வந்த ஒரு சில வாகனங்களையும், காரைக்காடு சோதனைச் சாவடியில் கொளத்தூர் போலீசார் திருப்பி அனுப்பினர்.பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறையினர் சோதனை சாவடி அமைந்துள்ளது. அந்த பகுதியில் கர்நாடகா வனத்துறையினருடன் இணைந்து கர்நாடக மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.