பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீடிக்க வேண்டும்
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீடிக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் பா.ஜனதா கோரிக்கை விடுத்து உள்ளது.
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீடிக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் பா.ஜனதா கோரிக்கை விடுத்து உள்ளது.
மத்திய மந்திரியிடம் கோரிக்கை
சிவகங்கை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் குணாளன் சிவகங்கை வந்த மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி வி.கே.சிங்கிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மானாமதுரை நகரம், சிவகங்கை, ராமநாதபுரம் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது, மானாமதுரை பகுதியில் இருந்து தினசரி சென்னைக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.தற்போது இரவு நேரத்தில் செல்லும் ெரயில்கள் மட்டுமே இங்கு உள்ளன. பகலில் செல்வதற்கு எந்த வசதியும் இல்லை.
மானாமதுரைக்கு நீடிக்க வேண்டும்
தற்போது சென்னையில் இருந்து காரைக்குடி வரை தினசரி கம்பன் விரைவு ரெயில் பகலில் சென்று வருகிறது. இந்த ரெயிலை மானாமதுரை வரை நீடிக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே சிவகங்கை, மானாமதுரை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் சென்னை-காரைக்குடி பல்லவன் விரைவு ரெயில் மானாமதுரை வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.