பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி தொடக்கம்


பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில்  தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி தொடக்கம்
x

பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி தொடக்கம்

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவைகள் தெருக்களில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் தெருநாய்களுக்கு பயந்து வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. இ

இந்த நிலையில் நகராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் சார்பில் தெருநாய்களை கணக்கெடுத்து கருத்தடை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதி தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் 1,089 தெருநாய்கள் சுற்றித்திரிவது தெரியவந்தது. இதனை ெதாடர்ந்து தெருநாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 75 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story