விற்பனைக்கு வந்திருந்த பனை ஓலை விசிறிகள்


விற்பனைக்கு வந்திருந்த பனை ஓலை விசிறிகள்
x

வடகாட்டில் பனை ஓலை விசிறிகள் விற்பனைக்கு வந்தன.

புதுக்கோட்டை

வடகாட்டில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு ஏழைகளின் ஏ.சி. என அழைக்கப்படும் பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறி விற்பனையில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் இரவு பகலாக திடீர் திடீரென மின் வெட்டு ஏற்பட்டு பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில், இத்தகைய பனை ஓலை விசிறிகள் மக்களுக்கு பெரும் பயனை தந்து வருகிறது. இரண்டு பனை ஓலை விசிறிகள் ரூ.50-க்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். சித்திரை திருவிழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் பலரும் இவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


Next Story