பனை விதைகள் நடும் நிகழ்ச்சி


பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:45 PM GMT)

பனை விதைகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரை பகுதியில் பனை தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் பனை விதைகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் வேலுச்சாமி, சமத்துவ மக்கள் கழக தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் மற்றும் பனைமர தொழிலாளர் நல வாரியம் விஸ்வநாதன், பனைமர தொழிலாளர் நல வாரியம் வேல்முருகன், ஜெகதீசன் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தில் 22 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், பனைமர நல வாரிய உறுப்பினர் கலாவதி, ஊராட்சி தலைவர்கள் நரிப்பையூர் நாராயணன், இதம்பாடல் மங்களசாமி, காணிக்கூர் தென்னரசி செல்லபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, வசந்தா கதிரேசன், சாயல்குடி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், குலாம் முகைதீன், ஆப்பனூர் ஆறுமுகவேல், பூபதி மணி, கோவிந்தராஜ், சாயல்குடி பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், நகர் இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் நரிப்பையூர் லாரன்ஸ், புனித ராஜன், ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் நாகரத்தினம், கோகுலம் மருது பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Next Story