1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கியது


1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கியது
x

மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாய தோட்டங்களில் ஒரு ஆண்டுக்குள், 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கியது.

நாமக்கல்

மோகனூர்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு

மோகனூர் தாலுகாவில் உள்ள வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, ஆண்டாபுரம், அரூர் ஆகிய ஊராட்சிகளின் சுற்றுப்புற பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, 'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' உருவாக்கப்பட்டதது.

இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

1 கோடி பனை விதைகள் நடவு

இந்நிலையில் விவசாயிகள் தங்களது தோட்டத்தின் வரப்புகளில், பனை விதைகள் விதைக்கும் முடிவு செய்தனர். முதல் கட்டமாக 25 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். கொ.ம.தே.க. ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாநில விவசாயி அணி செயலாளர் ராதிகா, நாம் தமிழர் கட்சி மண்டல தலைவர் பாஸ்கர், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர். பனை விதைகள் நடவு செய்யும் பணி, ஒரு ஆண்டுக்குள் 1 கோடி பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story