சூறைக்காற்றுக்கு பாக்கு மரங்கள் சேதம்


சூறைக்காற்றுக்கு பாக்கு மரங்கள் சேதம்
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 11:06 AM GMT)

ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் பாக்குமரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்தன.

சேலம்

ஆத்தூர்

பாக்கு மரங்கள்

ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்று வீசியது. அப்போது சாரல் மழையும் பெய்தது. ஆத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் பகுதியில் சுப்பிரமணி என்பவரின் பாக்கு தோட்டம் மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான பாக்கு மரங்கள் காற்றில் வேரோடு சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.

பாக்கு மரங்கள் விளைச்சல் அடையும் இந்த நேரத்தில் பாக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, சூறைக்காற்றில் பாக்கு மரங்கள் அடைந்த சேதத்துக்கு அரசு உரிய நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்றார்கள்.

விவசாயிகள் கவலை

இதேபோல் பல இடங்களில் சோளப்பயிர்கள், மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிர்களும் சூறைக்காற்றில் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஆத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story