பனைவிதைகள் விதைத்த கல்லூரி மாணவா்கள்


பனைவிதைகள் விதைத்த கல்லூரி மாணவா்கள்
x

பனைவிதைகள் விதைத்த கல்லூரி மாணவா்கள்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் தத்தெடுத்த கிராமமான கருமாபாளையத்தில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கருமாபாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசுகையில், தமிழர்களின் அடையாளமான பனைமரம் வேர் முதல் நுனி வரை பயனளிப்பதாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 30 கோடி பனை மரங்கள் இருந்தது. தற்பொழுது படிப்படியாக குறைந்து வருகிறது. இயற்கை சுழற்சிக்கும், நீர்நிலை பாதுகாப்புக்கும் உகந்த மரம் பனைமரம் என்று கூறினார். அதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, காமராஜ், செர்லின், தினேஷ்கண்ணன் ஆகியோர் தலைமையில் கருமாபாளையம் அம்பேத்கர் காலனியில் உள்ள ஓடையில் 2000-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் விதைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.



Next Story