பாம்பன் பால பராமரிப்பு பணி: ராமநாதபுரம், மண்டபத்துடன் ரெயில்கள் நிறுத்தம் நீடிப்பு


பாம்பன் பால பராமரிப்பு பணி: ராமநாதபுரம், மண்டபத்துடன் ரெயில்கள் நிறுத்தம் நீடிப்பு
x

கடல் நடுவே உள்ள பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், அந்த பாதையில் செல்லும் ரெயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை மண்டபம் மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

மதுரை


கடல் நடுவே உள்ள பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், அந்த பாதையில் செல்லும் ரெயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை மண்டபம் மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

பாம்பன் பால பணிகள்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில் பாலமானது, 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அதன் நடுவே தூக்குப்பாலமும் உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. சார்பில், பாம்பன் தூக்குப்பாலத்தின் அதிர்வுகளை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 22-ந் தேதி அளவுக்கு அதிகமாக அதிர்வுகள் தூக்குப்பாலத்தில் பதிவானதை தொடர்ந்து, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர், ரெயில்வே வாரியத்தின் தொழில்நுட்ப அறிவுரை மற்றும் ஆலோசனை குழுவான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் நேரடி மேற்பார்வையில் பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், மறுஅறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் - ராமேசுவரம் மெயின் லைன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16751/16752), கார்ட் லைன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.22661/22662) ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் மண்டபம் வரை மட்டும் இயக்கப்படும்.

ராமநாதபுரம் வரை

அதேபோல, திருப்பதி- ராமேசுவரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16779/16780), கன்னியாகுமரி - ராமேசுவரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22622/22621), அஜ்மீர் - ராமேசுவரம் (வ.எண்.20973/20974), பனாரஸ் - ராமேசுவரம் (வ.எண்.22536/22535), ஓகா கோட்டை- ராமேசுவரம் (வ.எண்.16734/16733) ஆகிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் மண்டபம் வரை மட்டும் இயக்கப்படும்.

திருச்சி - ராமேசுவரம், மதுரை - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும், அயோத்தியா கண்டோண்மென்ட் - ராமேசுவரம் (வ.எண்.22614/22613), புவனேசுவர் - ராமேசுவரம் (வ.எண்.20896/20895), ஹூப்ளி - ராமேசுவரம் (வ.எண்.07355/07356), கோவை - ராமேசுவரம் (வ.எண்.16618/16617), செகந்திராபாத் - ராமேசுவரம் (வ.எண்.07695/07696) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படும்.

திருப்பதி- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இணை ரெயிலான ராமேசுவரம் - மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.06780) மறு அறிவிப்பு வரும் வரை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.

பஸ் வசதி

இதற்காக, முன்பதிவு செய்திருந்த பயணிகளின் வசதிக்காக, மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் பயணிகள் ராமேசுவரம் வரை செல்வதற்கான கட்டணமில்லாத சேவையை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் செய்துள்ளது.


Next Story