பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம்


பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

சேலம்

பனமரத்துப்பட்டி:

பனமரத்துப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். நேற்று முன்தினம் பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய பகுதிகள் வழியாக சென்ற தேர், நிலையை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story