அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் தேர் சீரமைக்கும் பணி


அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் தேர் சீரமைக்கும் பணி
x

அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் தேர் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் தேர் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக 26-ந் தேதி மகா தீப ஏற்றப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவின் 7-ம் நாள் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அன்று காலையில் தொடங்கி நள்ளிரவு வரை விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தேர்கள் மாட வீதியில் அடுத்தடுத்து பவனி வரும். இந்த நிலையில் கோவிலில் தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விழா நாட்களில் சாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைத்து புதியதாக வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றது.

தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் தேர்கள் பழுது நீக்கி சீரமைக்கும் பணி தொடங்கி விறு, விறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதற்காக தேரடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு தேர்களின் பாதுகாப்பிற்காக மூடப்பட்டு இருந்த இரும்பு தகடுகள் நேற்று அகற்றப்பட்டன. தொடர்ந்து தேர்களின் சக்கரங்கள், அச்சு போன்ற பாகங்கள் உறுதியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. உறுதி குறைந்து உள்ள பாகங்களை மாற்றவும், சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேர்கள் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் பொதுப்பணித்துறை (கட்டுமானம்) அதிகாரிகள் தேர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் உறுதித் தன்மை குறித்து சான்று அளிக்க உள்ளனர்.


Next Story