வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு
வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பள்ளுர் கிராமத்தில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பூசணிக்காய் மற்றும் தேங்காயில் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். கடன் பிரச்சினை, குழந்தையின்மை, திருமண தடை, தொழில் தடை ஆகியவை விலகும் என்ற நம்பிக்கையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த பஞ்சமி வழிபாட்டில் கலந்துகொள்ள நெமிலி, பனப்பாக்கம், சயனபுரம், சேந்தமங்கலம், கணபதிபுரம், அரக்கோணம், காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story