ஊராட்சி மன்ற கூட்டம்
ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சிவப்பிரகாசம் வரவேற்றார். இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதியை மேம்படுத்துதல், ஊராட்சி சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணியை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. முடிவில், ஊராட்சி செயலாளர் சோழராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story