ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்


ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்
x

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ஆரணி அருகே புதுப்பட்டு ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயனற்று கிடந்தது. இதையடுத்து இதனை அகற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்க உத்தரவிடப்பட்டது.

புதுப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலாட்சி ரங்கநாதன், துணைத்தலைவர் ஜெய்க்கண்ணு மற்றும் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் உள்ளனர்.

செல்போன் டவரில் ஏறி மிரட்டல்

இதில் 3-வது வார்டு உறுப்பினர் சரத்குமார் என்பவர் தனக்கு ஊராட்சி நிர்வாகம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் எனது வீடு உள்ளது. வீட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பதில் சொல்வது எனக்கூறி நேற்று அப்பகுதியில் உள்ள டெலிபோன் டவரில் சுமார் 40 அடிக்கு மேலே ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வீரர்கள் சென்று பலமுறை குரல் கொடுத்தும் அவர் கீழே இறங்கி வரவில்லை. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கே வர வேண்டும் என்று அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை

பின்னர் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் வந்து சரத்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் கீேழ இறங்கி வந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story