ஊராட்சி மன்ற அலுவலக கண்காணிப்பு கேமராக்களை உடைத்த 2 பேர் மீது வழக்கு


ஊராட்சி மன்ற அலுவலக   கண்காணிப்பு கேமராக்களை உடைத்த 2 பேர் மீது வழக்கு
x

தேவதானப்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலக கண்காணிப்பு கேமராவை உடைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் ராணி. அதே பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3-ந்தேதி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினராக மோதி கொண்டனர்.

அப்போது ராணியின் உறவினரான காம் பரத் (வயது 28) என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள 2 கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் காம் பரத் உள்பட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story