ஊராட்சி வளர்ச்சி மன்ற முப்பெரும் விழா
ஊராட்சி வளர்ச்சி மன்ற முப்பெரும் விழா நடைபெற்றது.
புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சியில் கீழரசூர் ஊராட்சி வளர்ச்சி மன்றம், பத்து ரூபாய் இயக்கம் மற்றும் தமிழ் குரல் அறக்கட்டளை இணைந்து காமராஜர் நினைவுநாள், காந்தி பிறந்தநாள் மற்றும் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா நடத்தினர். விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் பத்து ரூபாய் இயக்க மாவட்ட செயலாளர் சேட்டு, மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் குழந்தைகள் நல திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் மற்றும் தமிழ் குரல் அறக்கட்டளை தங்கமணி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் மாணவ-மாணவிகளின் சிலம்பம், கோலாட்டம், கலை மற்றும் கும்மிபாட்டு, கிராமிய பாடல், விழிப்புணர்வு பாடலுடன் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக ஊராட்சி வளர்ச்சி மன்ற செயலாளர் மணிபதான் வரவேற்று பேசினார். முடிவில் ஊராட்சி வளர்ச்சி மன்ற துணை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை வளர்ச்சிமன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துசூர்யா தொகுத்து வழங்கினார்.