பஞ்சாயத்து தலைவர் கொலை: குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்


பஞ்சாயத்து தலைவர் கொலை: குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்
x

கோவில்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.

வில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது67). இவர் கடந்த 22-ம் தேதி தனது தோட்டத்தில் இருக்கும் போது வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 வாலிபர்களை கிழக்கு போலீசார்கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் வீட்டிற்கு இன்று சென்றார்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பொன்ராஜ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அவர் மனைவி பொன்னுத்தாய் மற்றும் உறவினர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.

அமைச்சருடன் திமுக நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், அரசு வக்கீல் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகராஜ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்தனம், கிளை செயலாளர்கள் தங்கராஜ், சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றார்கள்.


Next Story