ஊராட்சி தலைவர்களுக்கு இதுவரை அதிகாரம் வழங்கப்படவில்லை-தமிழக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குற்றச்சாட்டு


ஊராட்சி தலைவர்களுக்கு இதுவரை அதிகாரம் வழங்கப்படவில்லை-தமிழக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி தலைவர்களுக்கு இதுவரை அதிகாரம் வழங்கப்படவில்லை என்று தமிழக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குற்றம் சாட்டினார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

ஊராட்சி தலைவர்களுக்கு இதுவரை அதிகாரம் வழங்கப்படவில்லை என்று தமிழக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குற்றம் சாட்டினார்.

ஆலோசனை கூட்டம்

கிணத்துக்கடவில் கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பிரபு என்கிற திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

செயலாளர் கோவிந்தாபுரம் சண்முகம், மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தகுமார் (பொருளாளர்), அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் (கவுரவ தலைவர்), துணைத் தலைவர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ரத்தினசாமி வரவேற்றுப் பேசினார். விழாவில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் அரசை முனியாண்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிகாரத்தை முழுமைப்படுத்த வேண்டும்

ஊராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றும், தலைவர்களுக்கான பொறுப்புகளையும்,அதிகாரங்களையும் ஒப்படைக்கவில்லை. பஞ்சாயத்து ராஜ்யத்தில் சொல்லப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக நீர்த்துப்போக செய்து விட்டார்கள். தலைவர்கள் செயல்படுத்த முடியவில்லை.எல்லாமே ஒன்றிய நிர்வாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோரை வைத்து தான் செயல்படுத்துகிறார்கள். தலைவர்களிடம் எந்த ஆலோசனையும் கேட்பதில்லை. பஞ்சாயத்து நிர்வாகத்தில் சொல்லப்பட்ட அதிகாரத்தை முழுமைப்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவது என்பது தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக ஏற்புடையதல்ல என்று நோட்டீஸ் வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, சுல்தான்பேட்டை, மதுக்கரை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story