மத்வராயபுரம் அரசு பள்ளியில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற தலைமை ஆசிரியர் எதிர்ப்பு


மத்வராயபுரம் அரசு பள்ளியில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற தலைமை ஆசிரியர் எதிர்ப்பு
x

மத்வராயபுரம் அரசு பள்ளியில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற தலைமை ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

பேரூர்

மத்வராயபுரம் அரசு பள்ளியில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற தலைமை ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தினவிழா

கோவை மாவட்டம் பேரூர் அருகே மத்வராயபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ளது. இந்த பள்ளியில் நேற்று 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்த விழாவில் ஊராட்சி தலைவர் கிட்டுசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் குணா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜயசேகர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது அங்கிருந்தவர்கள் ஊராட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்ற வேணடும் என்று கூறினர். இதற்கு, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும், பள்ளியில் தலைமை ஆசிரியர் தான் கொடியேற்ற வேண்டும் என்று அவர்கூறிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார். இதையடுத்து இருவரும் சமாதானம் செய்து கொண்டு, ஒன்றாக தேசியகொடியை ஏற்றினர்.

வாக்குவாதம்

இந்த நிலையில் ஊராட்சி தலைவர் இருளர் சமுதாயத்தை சேர்ந்த வர் என்பதால் தான், பள்ளி தலைமை ஆசிரியர் தேசியக்கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்தார் என்று கூறி அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ், பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இனிவரும் காலங்களில் ஊராட்சி தலைவரே பள்ளியில் தேசியக்கொடி ஏற்றலாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்து கொண்டனர்.


Next Story