நீலமங்கலத்தில் ரூ.25½ லட்சத்தில் ஊராட்சி பள்ளி கட்டிடம்


நீலமங்கலத்தில் ரூ.25½ லட்சத்தில் ஊராட்சி பள்ளி கட்டிடம்
x

நீலமங்கலத்தில் ரூ.25½ லட்சத்தில் ஊராட்சி பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஊராட்சி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக 2 வகுப்பறைகள் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து இதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம்.கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராணி, ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் ராதிகா சக்கரபாணி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், மோகன்குமார், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என்.டி. முருகன், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பிரதிநிதி சக்திவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அசோகன் மற்றும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story