நெமிலி தாலுகா அலுவலகத்தை ஊராட்சி செயலாளர்கள் முற்றுகை

நெமிலி தாலுகா அலுவலகத்தை ஊராட்சி செயலாளர்கள் முற்றுகையிட்டனர்.
நெமிலி
நெமிலி தாலுகா அலுவலகத்தை ஊராட்சி செயலாளர்கள் முற்றுகையிட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான வாராந்திர கூட்டம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் தனலட்சுமி என்பவர் வேளியநல்லூர் ஊராட்சி செயலாளர் வெங்கடேசனை போனில் தொடர்பு கொண்டு ஏன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டபணியை செய்யாமல் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டத்திற்கு சென்றாய் என்று கேட்டுள்ளார். உடனே வெங்கடேசன் போனை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் யாரை கேட்டு கூட்டத்தை நடந்துகிறீர்கள் என்று வருவாய் ஆய்வாளர் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நெமிலி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுக்குறித்து தலைமையிடத்து துணை தாசில்தார் பரமேஸ்வரியிடம் கேட்டபோது இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.