ஊராட்சி செயலாளர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விடுப்பு மனு வழங்கினர்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் பணி நெருக்கடியை தவிர்க்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை அரசு தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். ஓய்வூதிய தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று(திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதற்கான வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், ஊராட்சி செயலாளர் சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் மதன், வேதாரண்யம் ஒன்றிய தலைவர் மணிவண்ணன், செயலாளர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் விடுப்பு கடிதத்தை வழங்கினார்.
Related Tags :
Next Story