ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
x

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, பொறியாளர்கள் ஜான், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் அருணாசலபாண்டியன், கீதா, மணிகண்டன், மாரிச்செல்வி மற்றும் பலர் பேசினர்.

கூட்டத்தில், குலையனேரி ஊராட்சி ரேஷன் கடை தெருவில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய பொது நிதியிலிருந்து சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைப்பது, திரிகூடபதி கிராமத்தில் முதல் மற்றும் இரண்டாவது மெயின் தெருவில் ரூ.1.62 லட்சத்தில் சிறுபாலம் மற்றும் வாறுகால் அமைப்பது, திரிகூடபுரம் பள்ளிவாசல் அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. அந்த சமுதாய நலக்கூடத்திற்கு செல்லும் பாதைக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பது என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story