ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதில் அந்தந்த ஊராட்சிக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் குறித்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். கவுன்சிலர்கள் சிவப்பிரகாசம், ஆ.கலா ஆஞ்சி, டி.பி.எஸ்.சிவா உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கினர்.
அதற்கு ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யவும், சுழற்சி முறையில் நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.