ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:46 PM GMT)

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், தலைவர் நாகராணி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் எம்.எம்.ஆர். துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) சிக்கந்தர் பாஷா வரவேற்றார். கூட்டத்தில், மன்றாம்பாளையம்-மெட்டுவாவி மண்சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும், நல்லட்டிபாளையம்-கோதவாடி இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும், தாமரைகுளத்தில் தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், தேவணாம்பாளையம் புதூக்காலனி முதல் வெடத்தலாங்காடு வரை புதிதாக அமைத்த கப்பி சாலை மீது தார்சாலை அமைக்க வேண்டும், குளத்துப்பாளையம் தொடக்கபள்ளியில் சிமெண்டு கற்கள் பதித்த தரைத்தளம் அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் கூறினார். பின்னர் 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் மகேந்திரன், தென்னரசு, ஞானசேகரன், எல்.ஜே.ஜே.ஜெகன், ராமசாமி, கலைக்குமார், ராஜேஸ்வரி, மஞ்சுளா, வள்ளிநாயகம், சத்தியபாமா, கலாமணி, வசந்தி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story