ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

ஆற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அப்போது சுலோசனா பேசுகையில் என்னுடைய பகுதியில் உள்ள பொதுக் கிணற்றில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கிணற்றை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும். மேலும் பயணியர் நிழற்கூடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

காஞ்சனா சேகர் பேசுகையில் பெரிய குக்கூண்டி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. கோடை காலம் வருவதால் உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும். புதுப்பாடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு ஒரு நிழற்கூடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

கூட்டத்தில் தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story