திண்டுக்கல், நத்தத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


திண்டுக்கல், நத்தத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

திண்டுக்கல், நத்தத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் சோபியா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சாலை அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், சுகாதார வளாகம் கட்டுதல், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் ஒழிப்பு பணி செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அலுவலக மேலாளர் சுமதி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

நத்தம் ஒன்றியக்குழு கூட்டம்

இதேபோல் நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், அதன் தலைவர் ஆர்.வி.என். கண்ணன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, பத்மாவதி, ஒன்றியக்குழு துணை தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தங்களது வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர். இதற்கு தலைவர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசினர்.

கூட்டத்தில் வரவு-செலவு அறிக்கையை உதவியாளர் கருப்பணபிள்ளை வாசித்தார். அரசு நிதியை முறையாக அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து வழங்குவது என்பன உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் நம்பிதேவி நன்றி கூறினார்.


Next Story