சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்-வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது


சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்-வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது
x

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

சேலம்

12 பதவிகளுக்கு தேர்தல்

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு மற்றும் பதவி விலகல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரையில் ஏற்பட்ட 12 பதவி இடங்களை நிரப்புவதற்காக தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், அயோத்தியாப்பட்டணம், மேச்சேரி, சங்ககிரி, தலைவாசல், தாரமங்கலம், வாழப்பாடி, காடையாம்பட்டி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

சேலம் ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு உறுப்பினர் பதவி மற்றும் மின்னாம்பள்ளி, பூவனூர், நடுப்பட்டி, கூணான்டியூர், பொட்டனேரி, தெத்திகிரிப்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, தேவியாக்குறிச்சி, கிழக்கு ராஜாபாளையம், எலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை ஆகிய ஊராட்சிகளில் 11 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

9-ந் தேதி வாக்குப்பதிவு

அதன்படி காலியாக உள்ள 12 உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 30-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.

அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் 12-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கார்மேகம் தெரிவித்துள்ளார்.


Next Story