ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை
x

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்ணவால்குடி ஊராட்சியில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்ட த்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கீழாத்தூர் ஒன்றிய செயலாளர் குமாரவேல் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆலங்குடி போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story