சிதம்பரத்தில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் கலெக்டரிடம், பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு


சிதம்பரத்தில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்    கலெக்டரிடம், பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
x

சிதம்பரத்தில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என கலெக்டரிடம், பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கடலூர்

புவனகிரி,

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- சிதம்பரம் பகுதியில் பெண்களுக்கு என தனியாக அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். மேலும் தனது தொகுதிக்குட்பட்ட தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளம், நாகச்சேரி குளம், ஒமக்குளம், தச்சன் குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளக்கரைகளில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பொதுமக்கள் வசித்து வந்த வீடுகள் கோர்ட்டு உத்தரவுப்படி இடிக்கப்பட்டன.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மாற்று இடம் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுஇடம் வழங்கவேண்டும். கொள்ளிடக்கரையோர கிராமங்களான ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர், கீழ்குண்டலபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மழை வெள்ளத்தின்போதும், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறப்பதாலும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க கொள்ளிடம் ஆறு கரையோரத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். மழை காலங்களில் மணிக்கொல்லை, வயலாமூர், பூவாலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் உட்புகுந்து வருவதால் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் சேதமடைந்து வருகிறது. ஆகவே இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story