ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

நீடாமங்கலத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சோ.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணைத்தலைவர் ஞானசேகரன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த துரைசிங்கம், பொன்னுசாமி, விஜய், சத்தியவாணன், சாந்தி, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பாரதிமோகன், பழனியம்மாள், த.மா.கா. மேனகா கார்த்திகேயன், அ.ம.மு.க. ராஜா ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.இதற்கு பதில் அளித்து ஊராட்சி ஒன்றிய தலைவர் சோ.செந்தமிழ்ச்செல்வன் பேசினாா். அப்போது அவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டம் செம்மையாக நடைபெற சமையல் கூடங்களை சீரமைப்பு செய்திட 15- வது நிதிக்குழு மானிய நிதியில் வரையறுக்கப்பட்ட 40 சதவீதத்தில் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைந்து நடைபெற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில வட்டார வளர்ச்சி அலுவலர் நமசிவாயம் நன்றி கூறினார்.


Next Story