பங்குனி திருவிழாவில்1,008 திருவிளக்கு பூஜை


பங்குனி திருவிழாவில்1,008 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:46 PM GMT)

உடன்குடி அருகே கல்லால் அய்யனார் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே கல்லால் அய்யனார் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பங்குனி உத்திர திருவிழா

உடன்குடி அருகேயுள்ள கூழையன்குண்டு அல்லிஊத்து கல்லால் அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஏப்.4-ந் தேதி தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு தீர்த்தம் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. மறுநாள் அதிகாலை 5 மணி முதல் மங்கள இசை, மகா கணபதி ஹோமம், கல்லால் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மூ மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி, காலை 7 மணிக்கு பால்குடம் பவனி நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

காலை 8 மணிக்கு வைத்தியலிங்க சுவாமி, கல்லால்அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும், காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. காலை 9.30 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார பூஜையும், காலை 10 மணிக்கு வில்லிசையும், நண்பகல் 12 மணிக்கு விஷேச தீபாராதனையும், மாலை 6 மணிக்கு உடன்குடி பகுதியில் வறண்டு கிடக்கும் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வர வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு நகைச்சுவை இசைப் பட்டி மன்றமும், இரவு 8.30 மணிக்கு வைத்தியலிங்க சுவாமி குடியிருப்பில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 12மணிக்கு விசேஷ தீபாராதனை சுவாமி, அம்பாள் அனுக்கிரக பூஜையும் நடந்தது.

நேற்று காலை 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு பத்திரகாளி அம்மன் மஞ்சள் நீராடுதல், பகல் 12.30 மணிக்கு மேளதாளம் முழங்க பத்திரகாளி அம்மன் பரிவார தேவதைகளுடன் அல்லி ஊத்தில் நீராடுதல், மாலை 5.30 மணிக்கு சுடலைமாடன் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

அலங்கார பூஜை

இரவு 7 மணிக்கு திரைப்பட கச்சேரி, இரவு 8.30 மணிக்கு வில்லிசை, இரவு 10 மணிக்கு கனியான் கூத்து, நள்ளிரவு சுடலைமாட சுவாமிக்கு நடு ஜாம பூஜை, சுவாமி பரிவாரங்களுடன் தில்லைவனம் சென்று வருதல் நடைபெற்றது. இன்று அதிகாலை 2 மணிக்கு காலம்மை நாடாச்சி அம்மனுக்கு சிறப்பு பொங்கலிட்டு விசேஷ படைப்புகளுடன் அலங்கார பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு சுடலைமாடன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நிறைவு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story