பங்குனி உத்திர திருவிழா பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்


பங்குனி உத்திர திருவிழா பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்
x

பூந்தமல்லி உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

திருவள்ளூர்

பூந்தமல்லி, சீரடி சாய் நகர் பகுதியில் முருகன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பூந்தமல்லி டிரங்க் சாலையில் உள்ள பனையாத்தம்மன் கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை தலைகளில் சுமந்து கொண்டு கைகளில் வேலுடன் ஊர்வலமாக முருகன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பால் குடங்களை எடுத்து முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.


Next Story