திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா


திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா
x
தினத்தந்தி 26 March 2023 11:45 PM GMT (Updated: 26 March 2023 11:45 PM GMT)

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூர்

பங்குனி உத்திர திருவிழா

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் நடராஜபெருமான் திருநடனம் புரிந்த 5 சபைகளில் முதல் (ரத்தின) சபையாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதை தொடர்ந்து 10 நாட்கள் காலை, இரவு உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கமலத்தேர் விழா

விழாவின் 7-ம் நாளான அடுத்த மாதம் 1-ந்தேதி கமலத்தேர் விழா நடை பெற உள்ளது. 6-ந்தேதி இரவு, 10 மணிக்கு காரைக்கால் அம்மையார் ஊஞ்சலும், 7-ந்தேதி இரவு, 10 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருவீதியுலாவும் நடைபெறும்.

அன்று இரவு காரைக்கால் அம்மையார் ஐக்கிய காட்சி நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வர் என்பதால் திருத்தணி கோவில் அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு பின் பங்குனி உத்திர விழா நடைபெறுவதால் உள்ளூர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story