புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பரபரப்பு:தலைவர்- தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்தனா்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பரபரப்பு:தலைவர்- தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்தனா்
x

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவை நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவை நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி

ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க. கவுன்சிலர்களும், 2 வாா்டுகளில் 2 காங்கிரஸ் கவுன்சிலர்களும் வென்று உள்ளனர். 1 வார்டில் அ.தி.மு.க.வும், 1 வார்டில் சுயேச்சையும் வென்று உள்ளனர். நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஜனார்த்தனனும், துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பி.ஏ.சிதம்பரமும் உள்ளனர்.

புறக்கணிப்பு

இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதற்கான அழைப்பிதழில் தேசியக்கொடியை புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் சையது உசேன் ஏற்றுவார் என அச்சிடப்பட்டிருந்தது.

அதன்படி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை நகராட்சி ஆணையாளர் சையது உசேன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அழைப்பிதழில் தேசியக்கொடியை ஏற்றி வைப்பவர் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் என இருந்ததால் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், தி.மு.க. கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் விழாவை புறக்கணித்தனர்.

ஆனால் விழாவில் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலரான புவனேஸ்வரி, சுயேச்சை உறுப்பினரான கிரிஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story