ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில்குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு


ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில்குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 May 2023 9:37 PM GMT (Updated: 27 May 2023 5:46 AM GMT)

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் குடிபோதையில் நடுரோட்டில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் குடிபோதையில் நடுரோட்டில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நடுரோட்டில் அமர்ந்த பெண்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு பெண் மொபட்டில் வந்தார். பின்னர் அவர் காந்திஜி ரோட்டில் மொபட்டை நிறுத்தி திடீரென நடுரோட்டில் அமர்ந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களும் திரண்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த பெண் தானாக அங்கிருந்து நடந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சென்றார். அங்கு ஒரு பஸ்சுக்கு முன்பு நின்று கொண்டு அந்த பெண் ரகளையில் ஈடுபட்டார்.

குடிபோதையில்...

மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், போலீசாருடன் இணைந்து அங்கிருந்து அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் புலம்பி கொண்டே இருந்தார்.

இதையடுத்து ஒரு ஆட்டோவில் அவரை பொதுமக்களும், போலீசாரும் வலுக்கட்டாயமாக ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த பெண் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story