கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சங்கராபுரம்,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் உஷா தலைமை தாங்கினார். உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், இணை இயக்குனர் (நலப் பணிகள்) செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன், மாவட்ட ஆவின் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ராஜா வரவேற்றார். முகாமை, உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.
இதில் டாக்டர்கள் சக்கரவர்த்திபாபு, சண்முகசுந்தரம், நேரு, சம்பத்குமார், முத்துக்குமரன், ஜனனி, பிரசன்னா கொண்ட குழுவினர்கள் பொது மற்றும் இருதய மருத்துவம், கண், காது மூக்கு, மற்றும் தொண்டை, எலும்பு மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், மனநலம், பல் மருத்துவம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே மதியம் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அங்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முகாமில் ஒருங்கிணைந்த தேசிய சுகாதாரக் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்திமதி, செந்தாமரை, முருகன் மற்றும் ஒன்றியகவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் 2500-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர். இவர்களில் 41 பேர் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.