ரிஷிவந்தியம் அருகே பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்: வசந்தம் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்
ரிஷிவந்தியம் அருகே பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மருந்து பெட்டகம், மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளை வழங்கி பேசினார். முகாமில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பேருக்கு உடற்பரிசோதனை செய்து, நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டது. முகாமில் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், துணைத் தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தகுமாரி லிங்கநாதன், அட்மா தலைவர் பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே மருத்துவ முகாமை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.