பரமக்குடி அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்


பரமக்குடி அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவியிடம் போனில் ஆபாசமாக பேசிய பரமக்குடி அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக்கோரி மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

மாணவியிடம் போனில் ஆபாசமாக பேசிய பரமக்குடி அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக்கோரி மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றியவர் சத்தியசேகரன். இவர் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாகவும், மற்றொரு மாணவி குறித்து அவதூறாகவும் பேசியுள்ளார். அவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

அதை தொடர்ந்து பேராசிரியர் சத்தியசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பரமக்குடி நகர் போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் பேராசிரியர் சத்தியசேகரன் மீது உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு, அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

அவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சார்பில் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மக்கள் பாதை சரவணகுமார், தென் தமிழர் மாணவர் அமைப்பு பாலமுரளி, ஆம் ஆத்மி முத்துக்குமார், மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் வில்லியம்ஜாய்சி, மாவட்ட தலைவர் அஜய், மாநில துணை செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். டி.ஒய்.எப்.ஐ. தாலுகா செயலாளர் முனியசாமி, பசலை நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story