பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றம்:அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றம்:அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:46 PM GMT)

பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சுற்றுலா பயணிகள்

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மற்றும் தமிழக -கேரள எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதிகளிலும் மழை நின்று கடுமையான வெயில் வாட்டி வருகிறது. மேலும் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்து சென்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் அணையிலிருந்து தண்ணீர் கேரளாவிற்கு வெளியேறி வருகிறது.

இதனால் சோலையாறு அணையிலிருந்து தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு மின் உற்பத்திக்குப் பின் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோலையாறு அணைக்கு சொந்தமான 2 மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டதால் தொடர்ந்து சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 160 அடியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பரம்பிக்குளம் அணையிலிருந்து வெளியேறி வரும் தண்ணீர் சாலக்குடி ஆற்றில் பாய்ந்து சென்று வருவதால் வால்பாறையிலிருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அதிகளவில் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் அங்கு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.Next Story