பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதில் பள்ளி கமிட்டி நிர்வாகிகள், மாதர் சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு சாத்தூர், கோவில்பட்டி, சங்கரன்கோவில் செல்லும் பஸ்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.
Related Tags :
Next Story