மதுரை ரெயில் நிலையத்தில் மர்ம பார்சலால் பரபரப்பு


மதுரை ரெயில் நிலையத்தில் மர்ம பார்சலால் பரபரப்பு
x

மதுரை ரெயில் நிலையத்தில் மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை


அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனையொட்டி, ரெயில் நிலையத்தில், போலீசார் மேப்பநாய் உதவியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், நேற்று மாலை ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள பார்சல் அலுவலகத்திற்கு வந்த ஒரு பார்சலை பார்த்து மோப்பநாய் நீண்ட நேரம் குரைத்தபடி நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னர், பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் பாத்திரங்கள், சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மர்ம பார்சலால் மதுரை ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story