பள்ளியில் பெற்றோர் தின விழா


பள்ளியில் பெற்றோர் தின விழா
x

பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளியில் பெற்றோர் தின விழா நடந்தது.

தென்காசி

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 33-வது பெற்றோர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல் இறை பிரார்த்தனை செய்தார். மாணவ தலைவி ஜெயஸ்ரீ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களை பள்ளியின் இயக்குனர் டாக்டர் பிராம்டன் ரெத்தின பெல் அறிமுகம் செய்தார். ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் ராபர்ட் பென் வாசித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் எம்.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கல்வி மற்றும் தனி திறமை போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். பின்னர் அவர்கள் இருவரும் பேசும் போது, மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை அறிந்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு பள்ளி சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி.பெல் நன்றி கூறினார்.


Next Story