ஹரிஹர புத்திர சாமிகள் கோவிலில் பரிவேட்டை திருவிழா
ஹரிஹர புத்திர சாமிகள் கோவிலில் பரிவேட்டை திருவிழா நடைபெற்றது.
திருச்சி
லால்குடி அடுத்த பூவாளூர் வேலாயுதபுரத்தில் பூரண புட்கலாம்பிகா சமேத ஹரிஹரபுத்திர சுவாமி ேகாவில் உள்ளது. இக்கோவிலில் பரி வேட்டை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. கோவிலிலிருந்து கருப்பண்ணசாமி, நாகப்ப சாமி மதுரைவீரன், ஹரிஹர புத்திர சாமிகளுக்கு முளைப்பாரி உடன் புறப்பாடு பரிவேட்டை சென்றடைந்தது. விழாவையொட்டி கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் பூவாளூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story