ஆதிநாராயண சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி


ஆதிநாராயண சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 July 2023 12:30 AM IST (Updated: 10 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆதிநாராயண சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளன்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டார். பின்னர் அங்குள்ள பால் கிணற்றின் அருகே மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயணசுவாமி பரிவேட்டையாடினார். இதன் அடையாளமாக கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் அம்பு எய்தினார். அதன் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story