மேட்டூர் தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கூட்டம்:2026-ம் ஆண்டுக்கு முன்னோட்டமாக நாடாளுமன்ற ேதர்தலில் வெற்றி பெற வேண்டும்டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மேட்டூர்
மேட்டூர் தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கூட்டத்தில் பேசிய பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 2026-ம் ஆண்டுக்கு முன்னோட்டமாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பா.ம.க. கலந்தாய்வு கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேட்டூர் சட்டசபை தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் எம்.கே.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமான தேர்தலாக இருக்கும். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து தரப்பு நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இந்த தேர்தலை முன்னோட்டமாக வைத்துக்கொண்டு 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அபரிமிதமான வெற்றியைப்பெற அனைவரும் பாடுபட வேண்டும்.
மாற்றுக்கட்சியினரையும்...
வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் குழு குழுவாக பிரிந்து ஒவ்வொரு இல்லத்தில் உள்ள மாற்றுக்கட்சியை சேர்ந்த வாக்காளராக இருந்தாலும் அவர்களை இல்லத்தில் சந்தித்து நமது கட்சிக்கு வாக்குகள் சேகரிக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி, முன்னாள் எம்.பி. தேவதாஸ், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், கொளத்தூர் ஒன்றியக்குழு துணை தலைவர் எம்.சி. மாரப்பன், பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் வெடிக்காரனூர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், கொளத்தூர் நகர செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், வக்கீல் சதாசிவம், அன்புமணி தம்பி படை மாவட்ட செயலாளர் அருண் பிரசாத் மற்றும் மேட்டூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.