நாடாளுமன்ற தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் , சென்னை தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார்.
இதில் முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் நாளை தமிழ்நாடு வர உள்ளதாகவும், மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் மார்ச் 7ம் தேதி வருவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story