பரோட்டா மாஸ்டர் தற்கொலை


பரோட்டா மாஸ்டர் தற்கொலை
x

என்.புதுப்பட்டியில் பரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கொண்டப்பன் மகன் சுரேஷ் (வயது 33). இவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இவரது தாயார் சாந்தி (வயது 51). இந்தநிலையில் சுரேஷ் தனக்கு திருமணம் குறித்து தனது தாயாரிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று மாலை வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதைபார்த்த அவரது குடும்பத்தினர் சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரவது தாயார் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story